கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மே 17 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துவந்தது. அதிலும் குறிப்பாக கல்வராயன்மலைப் பகுதியில் அதிகமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுவந்தது.
இந்நிலையில், இதைத் தடுக்கும் நோக்கிலும் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினர் ரேவதி தலைமையிலான குழு தீவிர சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக தொரடிபட்டு, தாழ்பாச்சேரி விளாம்பட்டி கரு நெல்லி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடத்தி வரப்பட்ட 660 கிலோ வெல்லமும், விற்பனைக்காக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 440 லிட்டர் எரிசாராயத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்