ETV Bharat / state

கிரிக்கெட் மட்டையால் வார்னே ஓவியம் - ஆசிரியரின் அஞ்சலி வீடியோ

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், சுழல் பந்து ஜாமபவானுமான ஷேன் வார்னே மறைவிற்கு ஓவிய ஆசிரியர் சு.செல்வம், வார்னேவின் ஓவியத்தை கிரிக்கெட் மட்டையால் வரைந்து ஓவிய அஞ்சலி செலுத்தினார். இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் மட்டையால் ஷேன் வார்னே ஓவியம் - ஓவிய அஞ்சலி செலுத்திய வைரல் ஆசிரியர்.

author img

By

Published : Mar 5, 2022, 8:04 PM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக மணலூர்பேட்டை சு.செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கிரிக்கெட் மட்டையைக் கொண்டு ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழல் ஜாம்பவனுமான ஷேன் வார்னே உருவத்தை வரையும் காணொலி ஒன்றை வெளியிட்டார்.

குறிப்பாக, இதில் பிரஷ் பயன்படுத்தாமல், வெறும் கிரிக்கெட் மட்டையாலே வார்னே படத்தை 15 நிமிடங்களில் வரைந்து ஓவிய அஞ்சலி செலுத்தினர்.

கிரிக்கெட் மட்டையால் ஷேன் வார்னே ஓவியம்

ஷேன் வார்னே, மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 5) தாய்லாந்தில் உயிரிழந்தார். தற்போது உலகம் முழுவதும் உள்ள வார்னே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இவர் ஓவியத்தின் மூலம் அஞ்சலி செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஷேன் வார்னே: 15 ஆண்டுகால கிரிக்கெட்... எண்ணற்ற சாதனைகளும்... போராட்டங்களும்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.