ஆகஸ்ட் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. எட்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இ-பாஸ் முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து இயக்க உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கடைப்பிடிக்கும் இறுதி நாளான இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், திருவெண்ணை நல்லூர் சாலை, சென்னை சாலை என நான்கு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில், காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ஆவணங்கள் முறையாக இல்லாத இருசக்கர வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் காப்பீடு மற்றும் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் என சுமார் 240 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 150க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: இ பாஸ் முறை முழுமையாக ரத்து செய்யவில்லை - அமைச்சர் காமராஜ்