ETV Bharat / state

மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை!

கள்ளக்குறிச்சி: மணிமுக்தா ஆற்றில் நடந்து வரும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தி திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author img

By

Published : May 14, 2020, 10:07 AM IST

மணல் திருட்டு  மணிமுக்தா ஆறு  மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டு  கள்ளக்குறிச்சி மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டு  கள்ளக்குறிச்சி செய்திகள்  கள்ளக்குறிச்சி மணல் திருட்டு  Sand Theft  Manimuktha River  Sand theft in the Manimukta River  Sand theft in Kallakurichi Manimukta River  Kallakurichi News  Kallakurichi sand theft
மணல் திருட்டு Sand theft

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள புது உச்சிமேடு மணிமுக்தா ஆற்றில் இரவு நேரங்களில், தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாகவும், கொள்ளையர்கள் சாக்கு மூட்டைகளில் ஏற்றிய மணலை ஓர் இடத்தில் கொட்டி வைத்துக்கொண்டு பிறகு டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆற்றுப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் பகலிலும் கடத்தல் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதுபோல் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தால் ஆற்றிற்கு அருகாமையில் உள்ள விவசாய கிணறுகளில் முற்றிலும் நீர்வளம் பாதிக்கப்படும்.

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்

எனவே இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மணல் திருட்டை தடுத்து நிறுத்தி திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மணல் கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.