ETV Bharat / state

முதல்கட்ட வாக்குப்பதிவு: குவிக்கப்பட்ட போலீஸ்! - உள்ளாட்சித் தேர்தல்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு
author img

By

Published : Oct 6, 2021, 8:26 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்களில் காலை 7 மணிமுதல் தொடங்கிய வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 444 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 60 ஊராட்சி மன்றத் தலைவர், 25 ஒன்றிய கவுன்சிலர், மூன்று மாவட்ட கவுன்சிலர் என மொத்தமாக உள்ள 532 காலிப் பதவியிடங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 83 பேர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மீதமுள்ள 449 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்த ஒன்றியத்தில் சுமார் 449 பதவியிடங்களுக்கு ஆயிரத்து 448 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இங்குள்ள 258 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைச் செலுத்திவருகின்றனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வாக்குப்பதிவு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.