கள்ளக்குறிச்சி: அருகே கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, செல்லப்பிள்ளை உள்ளிட்ட 3 பேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் நாட்டிற்கு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.
அதேபோல் இவர்கள் மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், ராஜவேல்,மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய ஆறு பேரும் வேலைக்காக சென்றுள்ளனர். .
இந்நிலையில் வேலைக்கான ஒப்பந்தம் முடிந்த விட்டதாகவும், வேறு வேலை தேடிக்கொள்ளுமாறு தனியார் நிறுவனம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வருடமாக உணவு இன்றி அவர்கள் தவித்து வருவதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும் ஊருக்கு திரும்புவதற்கான விசாவையும் அந்நிறுவனம் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக அவர்கள் கூறினர்.
எனவே அனைவரும் தமிழகம் திரும்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:'உக்ரைனிலுள்ள தமிழர்களை மீட்க திருச்சி சிவா உட்பட 4 பேர் வெளிநாடு பயணம்' - அனுமதிகேட்டு முதலமைச்சர் கடிதம்