ETV Bharat / state

கரோனா பீதி: ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடல்! - Regulatory Sales Hall Closure

கள்ளக்குறிச்சி: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக திருக்கோவிலூர் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
author img

By

Published : Jul 20, 2020, 11:27 AM IST

Updated : Jul 20, 2020, 1:01 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திருக்கோயிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. இதனால் அதனைத் தடுக்கும் விதமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்படுவதாக கொள்முதல் விற்பனையாளர்கள் அறிவித்தனர். எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: உணவின்றி தவித்தவர்களின் பசியை போக்கிய சமூக ஆர்வலர்

Last Updated : Jul 20, 2020, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.