கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்ட உடலை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் நேற்று (செப். 30) கட்டட தொழிலாளி ஒருவர் மின்சார விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை இன்று (அக்.1) உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதாக இருந்தது.
இச்சூழலில், காலை உடற்கூறாய்வு செய்ய, உடலை பிணவறையில் இருந்து எடுத்தபோது, உடலின் மூக்கு, கால் பகுதிகளில் எலி கடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! கடத்தல்காரர்களிடம் தொடரும் விசாரணை!
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துமனையில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடலில் எலி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அதிகம் மக்கள் நாடிச் செல்லும் அரசு மருத்துவமனையில் இப்படிப்பட்ட சுகாதார சீர்கேடு நிலவுவது பெரும் ஆபத்தானது என, பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
சில ஆண்டுகளூக்கு முன்னால், சென்னையிலுள்ள கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சிவலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.