கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணனின் மனைவி ஜெயலட்சுமி(23). கர்ப்பிணியான இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணை அழைத்துக்கொண்டு அவரது மாமியார் செல்வி, உறவினர் அம்பிகா ஆகியோர் 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
![கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12079342_klk.jpg)
அப்போது ஆலத்தூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தபோது திடீரென 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து, சாலையோர புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி, செல்வி, அம்பிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி, செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரசவத்திற்காக ஆம்புலன்ஸில் சென்ற கர்ப்பிணி, அவரது உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீட்டில் கள்ளச் சாராயம் விற்பனை - ஒருவர் கைது!