விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் வட்டம் சித்திலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் சுகந்தன் (13). இவன் திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பு அருகேயுள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
சிறுவன் நேற்று (டிசம்பர் 21) மாலை பள்ளி முடிந்து நான்குமுனை சந்திப்பில் பேருந்திற்காகக் காத்திருந்தார். சோர்வாக இருந்த சிறுவன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் செல்வம் கண்டு உடனே சக காவலர்களை அழைத்துக் கூறினார். மேலும் மாணவனைத் தோளில் சுமந்துசென்று திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
தக்க நேரத்தில் மாணவனைக் காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் மாணவனை காவலர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: Watch Video: கர்நாடகாவில் பெண்ணின் உயிரைக் காத்த ரயில்வே காவலர்