ETV Bharat / state

Gambling arrest - ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த சூதாட்ட கும்பல் கைது - சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது

Gambling arrest: உளுந்தூர்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய கும்பலைச் சுற்றி வளைத்த காவல் துறையினரை, ஆபாச வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்த ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது
author img

By

Published : Dec 29, 2021, 3:58 PM IST

கள்ளகுறிச்சி: Gambling arrest: உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள எலவனாசூர்கோட்டை காவல் சரகம், பிடாகம் ஏரிகரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் பணம் வைத்து சூதாடி வருவது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிமொழியன் தலைமையில் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று, சூதாட்டக் கும்பலைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது பணம் வைத்து சூதாடிய கும்பல் காவல் துறையினரை ஆபாசமாகத் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்தனர். இருப்பினும், அவர்களைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் ஏழு பேரை கைது செய்தனர். மேலும், நான்கு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், எட்டு செல்ஃபோன்களும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தப்பி ஓடிய நான்கு பேரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் பணம் வைத்து சூதாடிய பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Theft in Director house: விஜய் சேதுபதி பட இயக்குநர் வீட்டில் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.