ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கலவரத்தில் எடுத்துச்சென்ற பொருட்களை சாலையோரமாக வீசிச்சென்ற பொதுமக்கள்! - Citizens who threw the things

கனியாமூர் கலவரத்தில் எடுத்துச்சென்ற பொருட்களை சாலையோரமாக வீசிச்சென்ற பொதுமக்கள் அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் எடுத்துச் சென்ற பொருட்களை சாலையோரமாக வீசி சென்ற பொதுமக்கள்!!

author img

By

Published : Jul 22, 2022, 1:17 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி தனியார் பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்தும் கொளுத்தினர். இந்த நிலையில் பள்ளி வளாகமே தீக்கிரையானது. மேலும் இந்த கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தனிப்படை போலீசார் சாட்சிகளை வைத்துக்கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கலவரத்தின்போது பள்ளி வளாகத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துச்சென்ற மேஜை, டேபிள், மின்விசிறி, பிரிட்ஜ், உள்ளிட்டப் பொருட்களை பள்ளி வளாகத்தில் திருப்பி வைக்குமாறு காவல் துறையினர் 'தண்டோரா' மூலம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் எடுத்துச்சென்ற பொருட்களை சாலையோரமாக வீசிச்சென்றுள்ளனர். இந்தப் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கலவரத்தின்போது வேடிக்கை பார்க்கச் சென்ற நபர்கள் கீழே கிடந்ததாக 14 செட் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் எடுத்துச் சென்ற பொருட்களை சாலையோரமாக வீசி சென்ற பொதுமக்கள்!!

இதையும் படிங்க: மாணவி இறப்பு குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல் துறை எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.