கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள ஆசனூர் கிராமத்தில் ஆடு வளர்க்கும் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள திப்புசுல்தான் என்பவர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து பராமரித்துவருகிறார்.
திப்பு சுல்தான் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று மாலை மீண்டும் கொண்டுவந்து தனது வீட்டின் முன்புறம் கட்டியுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அங்கிருந்த ஏழு ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். காலையில் தனது ஆடுகள் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திப்பு சுல்தான் எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருடிச் செல்லப்பட்ட ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து எடைக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தக்காளி விலையால் நசுங்கிய விவசாயிகளின் வருமானம்