கள்ளக்குறிச்சி அருகே ஈய்யனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவர் தனது நிலத்தில் சுமார் மூன்று ஏக்கரில் பப்பாளி மரங்கள் நடவுசெய்து பப்பாளி பழத்தை வாரந்தோறும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்நிலையில் நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக பப்பாளி பழம் பழுத்து மரத்திலே அழுகிய நிலையில் மேலும் புயல் காரணமாக அதிகப்படியான காற்று வீசியதால் பப்பாளி மரங்கள் கீழே விழுந்து நாசமாகின. ஏற்கனவே கரோனா பரவலால் ஏற்றுமதியிலும்,பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது நிவர் புயல் பாதிப்பால் ஏற்றுமதிக்கு வாகனம் வராமல் பழம் அனைத்தும் மரத்திலே அழுகியதோடு மட்டுமில்லாமல் மரமும் கீழே சாய்ந்துள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக உள்கட்சி பூசலை மறைக்க அதிமுக மீது புகார் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்