ETV Bharat / state

சாலையோரம் இருந்தவர் மீது மோதி 1 கி.மீ., வரை இழுத்துச் சென்ற கார்! - காரில் இழுத்துச் செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: சாலையோரம் அமர்ந்திருந்த முதியவர் மீது மோதி, காரில் சிக்கிய அவரை ஒரு கி.மீ., தூரம் வரை இழுத்துச் சென்ற சம்பவத்தில் அம்முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் இழுத்துச் சென்ற முதியவர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 9, 2021, 3:36 PM IST

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(65). தனது மனைவி இறந்த சோகத்தில் சுயநினைவின்றி இருந்த இவர், காரனூரிலுள்ள தனது அண்ணன் மகன் வீட்டில் தங்கியிருந்துள்ளார். கோவிந்தன் நேற்று (பிப்.08) மாலை 7 மணியளவில் உணவு சாப்பிட்டுவிட்டு, கச்சிராயபாளையம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள சாலையோர கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு சாலை ஓரமாக அமர்ந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலை ஓரமாக அமர்ந்திருந்த கோவிந்தன் மீது மோதி, அவரை சுமார் ஒரு கி.மீ தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று காரை கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர், அங்கிருந்த தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியுடன் காரில் சிக்கிக் கொண்டிருந்த முதியவரை பொதுமக்கள் சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர், உயிரிழந்த முதியவரை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் வாகனம்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஆய்வாளர் உள்பட 4 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.