கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்துவந்த ஷர்புதீன் நேற்று கள்ளக்குறிச்சி திமுக மாவட்டச் செயலாளர் அங்கையர்கண்ணி, மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது குறித்து ஷர்புதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியில் நான் பணியாற்றியவன் என்ற முறையில் கூறுகிறேன், அக்கட்சி ஒரு சமுதாய மக்கள், இளைஞர், வெளிநாடு வாழ் தமிழர்களை மூளைச்சலவை செய்துவருகிறது. அதுமட்டுமின்றி இலங்கைப் படுகொலையைக் காரணமாக வைத்துக்கொண்டு அந்தப் படுகொலைக் காட்சியை மட்டும் திரும்பத் திரும்ப வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், இந்தியர்களுக்கும் பரப்பி பணத்தைப் பெற்றுக்கொண்டுவருகிறது.
சீமான் தனக்குப் பிடித்தவர்களைக் கொண்டாடியும், பிடிக்காதவர்களை அவதூறாகப் பேசியும் வருகிறார். சீமான் மீது அடிக்கடி பாலியல் குற்றச்சாட்டுகளும் தினமும் ஒரு காணொலி வருவதால் அவர் தலைவருக்குத் தகுதி இல்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க...சும்மா பேச்சுக்கு ட்ரம்பை கலாய்த்த ஆர்ஜிவி