ETV Bharat / state

வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலில் எம்பி ரவிக்குமார் ஆய்வு - kallakkurichi district news

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலில் எம்பி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

சிவன் கோயிலில் எம்பி ரவிக்குமார் ஆய்வு
சிவன் கோயிலில் எம்பி ரவிக்குமார் ஆய்வு
author img

By

Published : Jan 9, 2021, 6:49 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் கி.பி 13ஆம் நூற்றாண்டில் குருநிலை மன்னராக ஆட்சி செய்த கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் மன்னன் சிவன் கோயிலை கட்டினார்.

இக்கோயில் பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் மூலம் கோயிலின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து நிதியை பெற்று தருவேன்" என்றார்.

இதையும் படிங்க: கோயில் பணியாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்’- இந்து அறநிலையத் துறை அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.