கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என 35-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்தவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு கவச உடைகள், கிருமி நாசினி திரவங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதம சிகாமணி தனது சொந்த செலவில் வழங்கினார்.
அதேபோல் அந்நகர திமுக சார்பில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்களுக்கு முகக் கவசம் , கிருமி நாசினி திரவம், பத்து கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி ,எம்.பி.கெளதம சிகாமணி ஆகியோர் வழங்கினர்.
இதையும் படிங்க: சாலையில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு