ETV Bharat / state

சங்கராபுரம் அருகே கனமழை: 600 ஆடுகள் உயிரிழப்பு! - Death of sheep

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பெய்த கனமழைக்கு 600 ஆடுகள் உயிரிழந்தன.

ஒரேநாளில் 300 ஆடுகள் உயிரிழப்பு
ஒரேநாளில் 300 ஆடுகள் உயிரிழப்பு
author img

By

Published : Jan 7, 2021, 10:54 AM IST

Updated : Jan 7, 2021, 6:58 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தில் கருத்த பிள்ளை மற்றும் பழனி அஞ்சலை என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணை இருந்து வருகிறது. இந்த ஆட்டுப்பண்ணையை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்றும் (ஜன.07) கனமழை பெய்தது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆக, உயிரிழந்த ஆடுகளின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆடுகள் எல்லாம் கிராமத்தை தாண்டி உள்ள எஸ்.வி பாளையம், ஊரணி ஆகிய கிராமங்களின் வரைக்கும் ஓடைகள் வழியாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கால்நடைகளுக்கு பரவும் தோல் அம்மை: மருத்துவர்கள் கைவிரிப்பு!

Last Updated : Jan 7, 2021, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.