ETV Bharat / state

'வாத்தியார் பிள்ளை மக்கு என்பதுபோல கருணாநிதி மகன் ஸ்டாலின் மக்கு!' - கள்ளக்குறிச்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழிக்கு ஏற்ப கருணாநிதி மகன் ஸ்டாலின் மக்கு என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம்செய்தார்.

minister cv shanmugam
minister cv shanmugam
author img

By

Published : Dec 5, 2020, 6:51 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கட்சியினருக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 12 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், "காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவரும் மு.க. ஸ்டாலின் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதுபோல கருணாநிதி மகன் ஸ்டாலின் மக்கு" என விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: கடற்படை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.