ETV Bharat / state

தலைகுப்புற கவிழ்ந்த மினி லாரி - சிதறிய குளிர்பான பாட்டில்கள் - குளிர்பானங்கள்

உளுந்தூர்பேட்டை அருகே குளிர்பானங்கள் ஏற்றிச்சென்ற மினி லாரி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்கள் சாலையில் கொட்டி சிதறின.

mini Eicher accident near uluntherpettai  mini Eicher  mini Eicher accident  kallakurichi news  kallakurichi latest news  மினி ஈச்சர்லாரி  தலைகுப்புற கவிழ்ந்த மினி ஈச்சர்  உளுந்தூர்பேட்டை அருகே தலைகுப்புற கவிழ்ந்த மினி ஈச்சர்  குளிர்பானங்கள்  சேதமடைந்த குளிர்பானங்கள்
சேதமடைந்த குளிர்பானங்கள்...
author img

By

Published : Aug 22, 2021, 9:31 PM IST

கள்ளக்குறிச்சி: சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் வந்துகொண்டிருந்தபோது மினி லாரியின் பின்புறம் டயர் வெடித்ததில், தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேதமடைந்த குளிர்பான பாட்டில்கள்..

குளிர்பான பாட்டில்கள் சேதம்

இதனால் லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்கள் சாலையில் கொட்டி சிதறின. இதில் லாரியில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தினால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அறிந்த வந்த போக்குவரத்து காவல் துறையினர், விபத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஈரானில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.