கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கந்தசாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் பால் விற்பனையாளர் கமலக்கண்ணன் (34).
இவரது மனைவி சுமதி (29). இவர்களுக்கு இரண்டு வயதில் தீபன் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் கனலக்கண்ணன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து இருந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காட்டில் தூக்கில் தொங்கிக் கிடந்த ஆண் சடலம் - காவல் துறையினர் விசாரணை!