கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சிறுபனையூர் தக்கா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சையத் அனிப் என்பவரது மகன் ஹாரூன் (40).
இவர் வீட்டில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி வைத்திருந்தார். இன்று (நவ. 13) தனது கைத்துப்பாக்கியைக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் பாஷா என்பவரது மகன் சானை (45) சுட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சானை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சான் உயிரிழந்தார்.
தற்போது திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் பாஜக நிர்வாகி மீது துப்பாக்கி சூடு: முன்னாள் ராணுவ வீரர் கைது!