கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகேயுள்ள எஸ். ஒகையூர் ஊராட்சியில், உடையார்பாளையம், உச்சி மனக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதி மக்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலையை இன்றுவரை பயன்படுத்திவருகின்றனர். சாலை முறையாக பராமரிக்கப்படாததால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சாலை காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்துள்ளதால் விளைச்சள்களை தலைவாசல் சந்தைக்கு எடுத்துச் செல்ல சிரமப்படுகின்றனர். லைக்குச் செல்பவர்கள், பள்ளிக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், மழைக்காலங்களில் சாலை பயன்படுத்தமுடியாத அளவிற்கு மோசமடைந்துவிடுகிறது.
விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே, 15ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய தார்ச்சாலையை அமைத்து தரவேண்டும். அரசு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்கின்றனர்.
இதையும் படிங்க: மரண பயத்துடன் தட்டிப்பாலத்தைக் கடக்கும் மக்கள்: நிறைவேறாத 50 ஆண்டுகால கோரிக்கை!