கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
மேலும், உயிரிழந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம், 4 மாணவர் சங்க நிர்வாகிகள் கைது!