ETV Bharat / state

துக்கநிலையில் மண்பாண்டத் தொழில்: பலநாள் உழைப்பின் ஊதியம் ஒரு ரூபாயான கதை!

கள்ளக்குறிச்சி: அந்த காலத்தில் எல்லாம் மண்பாண்டங்களுக்கு மரியாதை இருந்தது. அதனால் அதிகப்படியான மண்பாண்டங்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இப்பொழுது நவீன நாகரிக வளர்ச்சியால் மண்பாண்டங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது என வேதனை தெரிவிக்கின்றனர், மண்பாண்டத்தொழிலாளர்கள்.

Diya sales
Diya sales
author img

By

Published : Nov 29, 2020, 1:24 PM IST

Updated : Dec 1, 2020, 3:27 PM IST

மண்பாண்டங்களை வைத்துதான் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் தற்போது அறியப்பட்டு வருகிறது. தொல்லியல் துறை கீழடியில் கண்டெடுக்கும் புராதனப் பொருள்கள்கூட மண்ணால் உருவாக்கப்பட்ட பொருள்களாகவே கிடைக்கின்றன. இப்படி வரலாற்றில் பெயர் பெற்ற மண்பாண்டங்களின் பயன்பாடு என்பது இந்த பிளாஸ்டிக் உலகத்தில் குறைந்து போய்விட்டது. அதேசமயம் மண்பாண்டப் பொருள்களின் பயன்பாடென்பது கலைப் பொருள்களாகவும், காட்சிப் பொருள்களாகவும் உருமாறிவிட்டன.

தற்போது மண்பாண்டப் பொருள்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது திருவிழா நேரங்களில் தான். குறிப்பாக 'கார்த்திகை தீபத் திருவிழா' அன்று பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள்தான், மண்பாண்டப் பொருள்களிலேயே அதிகம் விற்பனையாகும் பொருளாகும். கரோனா தொற்று, மழை என்ற பல காரணங்களினால், இந்த ஆண்டும் அதன் விற்பனை குறைந்துவிட்டது.

மண்பாண்டத் தொழில்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது தம்பிகளுடன் தங்களது பாரம்பரியத் தொழிலான மண்சட்டி, மண்அடுப்பு, அகல் விளக்கு போன்ற மண்பாண்டங்களை செய்து விற்பனை புரிந்து வருகிறார். அதேபோல் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகளவு அகல் விளக்கை தயாரித்திருந்தாலும், எங்கள் தலைமுறையோடு, என் குடும்பத்தில் மண்பாண்டத் தொழில் மறைந்து விடும் எனக் கூறுகிறார், ஆறுமுகம்.

இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், 'மலைக்கோட்டலத்தில் மட்டும் எட்டு குடும்பங்கள் இத்தொழிலை செய்து வந்தோம். ஆனால், தற்போது இரண்டு குடும்பங்களான நானும், என் தம்பி மட்டுமே செய்து வருகிறோம். மேலும் நாங்கள் காலங்காலமாக இத்தொழிலை செய்து வருகிறோம். முதலில் எங்கள் தாத்தா செய்தார். பிறகு எங்கள் அப்பா செய்தார். அதன்பிறகு, நான் செய்து வருகிறேன். என்னுடன் இந்த மண் பாண்டங்கள் செய்யும் முறை நிச்சயம் முடிந்து விடும்.

அந்த காலத்தில் எல்லாம் மண்பாண்டங்களுக்கு மரியாதை இருந்து வந்தது. அதனால், அதிகப்படியான பானைகள், அடுப்புகள் தேவைப்பட்டதால் மக்களும் அதிகமாக வாங்கிச் சென்றனர். எங்கள் தொழிலும் நன்றாக இருந்தது. ஆனால், இப்பொழுது நவீன நாகரிக வளர்ச்சியால் கேஸ், சிலிண்டர், சில்வர் பாத்திரம், ஈயப் பாத்திரம், அச்சு விளக்கு, பாக்கெட் விளக்கு, நெய் விளக்குப் போன்ற மக்கள் உபயோகிப்பதால் மண்பாண்டங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. முந்தைய காலத்தில் எல்லாம் ஒரு ரூபாய்க்கு ஐந்து அகல் விளக்குகள் கொடுத்து வந்தோம். ஆனால், தற்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என சொன்னால் கூட வேண்டாம் என மக்கள் சொல்லிவிடுகிறார்கள். ஆகவே, ஒரு ரூபாய்க்கு, ஒரு விளக்கு என விற்பனை செய்து வருகிறோம்.

மேலும், இந்த வருடமும் அகல் விளக்குகள் குறைவாகத்தான் நாங்கள் தயாரித்தோம். 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செய்து வந்தோம். ஆனால், தற்போது ஆயிரம் விளக்குகள் மட்டுமே செய்து விற்பனைக்கு தயாராக வைத்திருக்கிறோம். மேலும் இது எங்களுக்கு எள்ளளவு கூட லாபமும் இல்லை. ஏதோ, எங்கள் குலத்தொழிலான இது செய்வதால் எங்களுக்கு மன திருப்தியும் மன ஆறுதலும் கிடைத்து வருகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு நலவாரியத்தின் மூலம் இத்தொழிலைச் செய்பவர்களுக்கு, ஏதாவது ஆண்டுதோறும் நிதியுதவி கொடுத்தால், எங்கள் பொருளாதாரமும் உயரும். எங்கள் தொழிலும் நன்றாக விரிவடையும். மக்களுக்கு மண்பாண்டங்கள் மீது மரியாதையும் இருக்கும். எங்கள் மீது கண் திறந்து பார்த்து நல்லது செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பணிவோடு கோரிக்கை விடுக்கிறேன்' என வருத்தத்தோடு தெரிவித்தார்.

அகல் விளக்குகள் மூலம் இல்லங்களில் வெளிச்சம் தரும் நபர்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி வெளிச்சம் கிட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: சோலார் மிதிவண்டி: அமெரிக்கன் கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Last Updated : Dec 1, 2020, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.