ETV Bharat / state

'புதியதாக உற்பத்தி செய்யும் முக கவசம் பயன்பாட்டுக்கு வரும் போது விலை குறைக்கப்படும்' - kallakurichi news

கள்ளக்குறிச்சி: புதியதாக உற்பத்தி செய்யப்படும் முக கவசம், கிருமி நாசினிகள் பயன்பாட்டிற்கு வரும் போது விலை குறையும் என மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கே.கே. செல்வன் தெரிவித்துள்ளார்.

சுய ஊரடங்கு உத்தரவு  முக கவசம் தட்டுப்பாடு  kallakurichi news  medical shop association leader
மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கே.கே. செல்வன்
author img

By

Published : Mar 23, 2020, 9:32 AM IST

பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்திருந்தனர். மருந்துக்கடைகள் சிலவும் நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் மருந்து கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் வலியுறுத்திய நிலையில், மருந்து கடை உரிமையாளர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மருந்துக் கடை உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் கே.கே. செல்வன் வந்திருந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு அனைவருமே முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், பொதுமக்கள் அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ளதால் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவினை ஏற்று நேற்று முதல் முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளின் விலையை குறைக்க உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

மருந்துக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கே.கே. செல்வன் பேட்டி

புதியதாக உற்பத்தி செய்யப்படும் முக கவசம், கிருமி நாசினிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஒரு வார காலம் ஆகும். அதன் பின்னர் விலையை குறைத்து கொடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா பரவாமல் தடுக்கு அயராது உழைப்பவர்களுக்கு கைதட்டி பொதுமக்கள் நன்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.