கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் துக்க நிகழ்ச்சிக்காக உளுந்தூர்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பில்ராம்பட்டு ஏரிக்கரையில் டாடா ஏசி வாகனம் ஓட்டிவந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டாடா ஏசி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து
இந்த விபத்தில் துக்க நிகழ்ச்சிக்காக டாடா ஏசி வாகனத்தில் சென்ற 30 நபர்கள் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சிக்காக கிராமத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற டாடா ஏசி வாகனம் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் கூவாடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.