கள்ளக்குறிச்சி அருகே உள்ள தடுப்பணையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் ராஜ்குமார், வரதராஜ், அஸ்விந்த் ஆகிய மூன்று சிறுவர்கள் தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ராஜ்குமார், வரதராஜ் ஆகியோர் மீட்கப்பட்ட நிலையில், வரதராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள அஸ்விந்தை மீட்கும் பணியில் தொடர்ந்து நான்காவது நாளாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் பரிசல், படகுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்றுவரும் சிறுவனை மீட்கும் பணி குறித்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது சிறுவனை மீட்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் மேலும் சிறுவனை மீட்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தீயணைப்புத் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க...'ஸ்டாலின் சொல்வதற்காக நிவாரணம் கேட்க வேண்டிய அவசியமில்லை' - கே.பி.அன்பழகன்