ETV Bharat / state

திமுகவையும், ஊழலையும் எப்போதும் பிரிக்க முடியாது: எல். முருகன் - kallakurichi bjp meeting

திமுகவையும் ஊழலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் திமுகவையும் கமிஷனையும் பிரிக்க முடியாது எனக் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார்.

kallakurichi bjp manadu l murugan speech

author img

By

Published : Dec 27, 2020, 5:06 PM IST

கள்ளக்குறிச்சி: சாமியார் மடம் பகுதியில் பாஜகட்சியின் அணி பிரிவு பிரதிநிதிகள் மாநாடு மாவட்ட தலைவர் பாலச்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த அணி பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் பேசிய எல்.முருகன், “திமுகவையும் ஊழலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் திமுகவையும் கமிஷனையும் பிரிக்க முடியாது. விவசாயிகள் செழிப்பாக இருக்கக்கூடாது, விவசாயிகளுக்கு நல்லது நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உரை

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய வேளாண் திருத்தச் சட்டம் உதவும்” என்றார். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.