ETV Bharat / state

நடுரோட்டில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்... வாகன ஓட்டிகளின் உயிரை காத்த சிறுவன்! - பள்ளி சிறுவன்

அரசம்பட்டி கிராமத்தில் நடுரோட்டில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை வழி மறித்து எச்சரிக்கை செய்த சிறுவனைப் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

பல பேர் உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவன்
பல பேர் உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவன்
author img

By

Published : Nov 28, 2021, 3:41 PM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டி கிராமத்தில் தொடர் மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அரசம்பட்டி கிராமத்தில் சிறுவர்கள் சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, சங்கராபுரத்திலிருந்த பாலப்பட்டு செல்லும் சாலையில் திடீரென சாலையோரம் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்கம்பிகள் அருந்து கொண்டு நடுரோட்டில் தொங்கின.

உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவன்
உயிரை காப்பாற்றிய பள்ளி சிறுவன்

அதனருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் அரவிந்த் என்ற சிறுவன் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததைக் கண்டு, சாலையின் உள்ள இருபுறங்களிலும் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகளை மறித்து இங்கே யாரும் வர வேண்டாம், மின்கம்பி அறுந்து கிடக்கிறது என எச்சரித்தார்.

இதனால் இருபுறங்களிலும் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ந்து போய் நின்றனர்.

நடுரோட்டில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததது
நடுரோட்டில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன

அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மின்துறை அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்தனர். ஒரு மணிநேரம் கழித்து வந்த மின்துறை ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் கம்பியைச் சரி செய்தனர். இதனால் சங்கராபுரம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் எந்த உயிர்க்கும் சேதம் ஏற்படாமல் பலபேர் உயிர்களைக் காப்பாற்றிய, அச்சிறுவனை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாராட்டியுள்ளனர். அச்சிறுவன் அரசம்பட்டி கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூரப்பா வழக்கு: முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழ்நாடு அரசு வாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.