ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு - பள்ளி மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி உயிரிழந்ததால் இயங்காமல் இருந்த பள்ளி 145 நாள்களுக்குப் பிறகு இன்று மீண்டு செயல்பட்டது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மீண்டும் திறப்பு

author img

By

Published : Dec 5, 2022, 10:47 PM IST

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததை அடுத்து தொடர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தளவாடப் பொருள்களை சேதப்படுத்தியதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள், பாதுகாப்புப் பணிக்கு வந்த காவல் துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இதில், மாணவி இறப்பு குறித்து சிபிசிஐடி அதிகாரிகளும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த தனியார் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்குள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அப்பள்ளியை மறுசீரமைக்க அனுமதிகோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான அடிப்படையில் பள்ளியின் கட்டடங்கள் மறுசீரமைக்கப்பட்டு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் மற்றும் காவல் துறையினரின் கண்காணிப்பில் மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து பள்ளியில் மறு சீரமைப்புப் பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து இன்று (டிச.05) பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 145 நாள்களுக்குப் பிறகு கனியாமூர் பள்ளியானது இன்று செயல்படத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பாக வாசலில் முகப்பு முன்னர் பேனர்கள் வைத்தும் பூங்கொத்து கொடுத்தும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியின் 3ஆம் தளத்தை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்ட ஆட்சியர், கூடுதல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு ஆணையிட்டார்.

அதன் பேரில் ஆட்சியர் முன்னிலையில் பள்ளியின் 3ஆம் தளத்தை ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். இந்த ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக்ராஜா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் தாசில்தார், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் வீடு அருகே திருட்டு.. பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.