கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனித் தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், மூன்றாவது முறையாக வண்ணம் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு தொகுதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதனை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு திறந்து வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உடனிருந்தார். திறப்பு விழா முடிந்த பிறகு குமரகுரு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்டம், நகரம், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை'