தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5,069 மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட 5,069 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை நீக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவிடம் ஜேக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை மனுவை வழங்கினார்.
அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், மகாலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.