கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் தடுப்பணையில் கடந்த ஆறு நாளுக்கு முன்னர் வரதராஜ், ராஜ்குமார், அஸ்விந்த் ஆகிய மூன்று சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் வரதராஜ், ராஜ்குமார் ஆகியோர் மீட்கப்பட்ட நிலையில் வரதராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மற்றொரு சிறுவன் அஸ்வந்தை மீட்கும் பணியில் தொடர்ந்து ஆறாவது நாளாக தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், கருணாபுரம் தடுப்பணை பகுதியில் நடைபெற்று வரும் சிறுவனை மீட்கும் பணிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்கும் பணிகள் குறித்து அலுவளர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ட்ரோன் மூலம் மீட்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் உத்தரவிட்டார். மேலும் சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களை சந்தித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் ஆறுதல் கூறினார்.