ETV Bharat / state

’இரண்டு கட்சிகளும் ஊழல், லஞ்சம் எனக் குற்றம் சாட்டுகிறது’ - பாரிவேந்தர் - IJK founder Parivendar's election campaign in Kallakurichi

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கட்சிகளும் ஊழல், லஞ்சம் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர், அந்த இரண்டு கட்சிகளும் தொடர வேண்டுமா என மக்கள் சிந்திக்க வேண்டும்” என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்  ஐஜேகே பாரிவேந்தர்  ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை  கள்ளக்குறிச்சியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை  IJK Founder Parivendar  Parivendar  IJK founder Parivendar's election campaign in Kallakurichi  IJK founder Parivendar election campaign
IJK founder Parivendar's election campaign in Kallakurichi
author img

By

Published : Mar 30, 2021, 11:46 AM IST

மக்கள் நீதி மையம் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடு்ம் வேட்பாளர் அய்யாசாமியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் நேற்று (மார்ச்.29) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்," தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் 50 ஆண்டு காலமாக மாறி மாறி ஆண்டார்கள். அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்லது செய்த காங்கிரஸ்ஸை 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பினீர்கள். ஆனால், தற்போது நாம் சொல்ல வேண்டாம், அவர்களே சொல்கின்றனர் ஆண்ட கட்சி ஆளுகின்ற கட்சியைப் பார்த்து அனைத்திலும் ஊழல் என்கிறது.

ஆளும் கட்சி ஆட்சியைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் ஊழல் என்று கூறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இரண்டு கட்சிகளும் பங்காளிகள். ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கின்றனர். ஊழல் என்று சொல்கின்ற இந்தக் கட்சிகள் இருக்க வேண்டுமா, தொடர வேண்டுமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இவர்கள் நன்றாக ஆட்சி செய்திருந்தார்கள் என்றால் மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் இலவசங்களை எதிர்பார்த்து கடந்த ஐம்பது ஆண்டுகளை வீணாக்கி விட்டீர்கள். பொதுமக்களின் வரி முறையாக திருப்பி செலவு செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொருவரின் தனிமனித வருமானமும் இன்று உயர்ந்திருக்கும்.

பொதுமக்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமும் இலவசங்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது. பொதுமக்களாகிய நீங்கள் தொடர்ந்து இலவசங்களை எதிர்பார்ப்பதன் மூலமாக நீங்கள் சரியாகப் படவில்லை என்பதும், உங்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்பதும் புரிகிறது.

ஆகவேதான் நீங்கள் இலவசங்களை நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் ஆண்ட கட்சியின் தலைவர், தனது வேட்பு மனுவில் தனக்கு ஒரு கார் கூட இல்லை என்றும் தனது சொத்து மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என்றும் குறிப்பிடுகின்றார்.

அவர்களிடம் தமிழ்நாட்டில் பாதி சொத்து உள்ளது. ஆனால் அவர்களின் பங்காளியான திமுக சொல்வதைப் பார்த்து தங்களின் சொத்து மதிப்பு ஆறு கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டைப் பங்குபோட்டு சொத்துக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் இருவரும் இதுபோன்று சொத்து கணக்குகளை காட்டுகிறார்கள் தனக்கு கார் இல்லை எனக் கூறுகின்றனர்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தேர்தல் பரப்புரை

அதற்கு மாறாக கூட்டணி அமைத்திருக்கிறார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன். அவரது தொழில் நடிப்பு. சிறந்த நடிகர். அவருடைய சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய் என தனது வேட்புமனுவில் தெரிவிக்கின்றார். இதன் மூலமாக மக்கள் சிந்திக்க வேண்டும். தலைவன் எப்படிப்பட்டவரோ அப்படியே தொண்டனும் இருப்பான் என்பதையும் யோசிக்க வேண்டும்.

எனவே ஒரு நல்ல கூட்டணி தமிழ்நாட்டில் மூன்றாவது கூட்டணியாக அமையப்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யக் கூட்டணியில் கள்ளக்குறிச்சி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அய்யாச்சாமிக்கு வெற்றி சின்னமான ஆட்டோ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும்” எனப் பேசினார். இந்தப் பரப்புரையில் ஐஜேகே, சமக, மநீம கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 300 மாணவர்களுக்கு இலவச கல்வி'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.