கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டார். பின்னர் அவர் கரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறுகையில், "அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊரடங்கை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்கள பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றிட வேண்டும். கரோனா சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதராபாத்தில் செலுத்தப்பட்டது