உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அரசு மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருமளவு கள்ளச்சாராயம் காய்ச்சும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.
கள்ளக்குறிச்சியில் மறைவானப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையில் கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் வள்ளி, காவல்துறையினர் கல்வராயன்மலைப் பகுதிகளில் ட்ரோன் மூலம் பார்வையிட்டனர்.
அப்போது அங்குள்ள மறைவானப் பகுதியில் 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் வைக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அதை தரையில் ஊற்றி அழித்தனர். மேலும், அதனைக் காய்ச்சியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு!