கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருந்தை கிராமத்தில் இந்து, கிறிஸ்தவம் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டியலின இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு இடம் அமைத்து, அதில் கட்டடம் கட்டித் தரக்கோரி பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுநாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
அதுபோல அப்பகுதியிலுள்ள இந்து மக்களை மதமாற்றம் செய்யச் சொல்லி சிலர் கட்டாயப்படுத்தி வருவதால், அவர்கள் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகிறது.
எனவே, பட்டியலின இந்து மக்கள் ஆட்சியரிடம் நேரில் சென்று தங்களின் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, இப்பிரச்னை தொடர்பாக மனு ஒன்றினை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மீஞ்சூரில் கொலையான நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்