கள்ளக்குறிச்சி மாவட்டம் மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசுந்தரி. இவரின் பெயர் அங்கனூர் ஊராட்சியில் மாறுதலாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் வாக்களிக்கச் சென்றபோது வாக்குச்சாவடியில் இருந்த பூத் ஏஜெண்டுகள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.
அதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மாமனார் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனத்தகராறில் ஈடுபட்டார்.
வாக்குச்சாவடியில் கைகலப்பு
அப்போது பூத் ஏஜெண்டுகளுக்கும் அவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவஇடத்தில் இருந்த காவல் துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சரிசெய்தனர்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முன்னாள் அமைச்சர்!