ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை: இது தீபாவளி அதிரடி - ulundurpet

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி கொட்டும் மழையில் இரண்டு மணி நேரத்தில் ரூபாய் மூன்று கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்
author img

By

Published : Nov 4, 2021, 3:29 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். காய்கறி, பழ வகைகள் குறைந்த விலையில் அதிக அளவில் விற்பனையாகும்.

இந்தச் சந்தையில் காலை 6 மணி முதல் ஒன்பது மணிக்குள்ளாக, ஆட்டுச்சந்தையும் நடக்கும். தீபாவளி, பொங்கல் ஆடிப்பெருக்கு, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைக் காலங்களில் ரூபாய் 2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இங்கு ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம்.

ஆடுகள் விற்பனை
விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஆடுகள்

நேற்று (நவ.03) காலை 6.30 மணிக்குத் தொடங்கிய ஆட்டுச்சந்தையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரூபாய் 3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை வாகனங்கள் மூலம் ஏற்றிக்கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை செய்தனர்.

ஆடுகள் விற்பனை
வாகனங்களில் கொண்டுவரப்பட்ட ஆடுகள்

ஒவ்வொரு ஆடுகளும் ரூ. 8ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையில் விற்பனையானது. அதன்படி இந்தச் சந்தைக்கு வந்திருந்த புதுச்சேரி, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் விவசாயிகள் கொண்டு வந்திருந்த ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி
கொட்டும் மழையில் ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள்

இதனால் நேற்று காலை 2 மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தையில் ரூபாய் மூன்று கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. மேலும், விவசாயிகள் அதிக விலைக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாலும், வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றதாலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க:அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.