வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் இன்று (டிச.8) நடைபயண பேரணி நடைபெற்றது.
இந்த நடைபயண பேரணியின்போது வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், அதனை ஆதரித்த மாநில அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பட்டன.
இந்தப் பேரணி, கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தொடங்கி, கடைவீதி, குளத்துமேட்டுத் தெரு, காந்தி சாலை வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
இந்த நடைபயண பேரணியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் பாரத் பந்த் ஆதரவாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்