கள்ளக்குறிச்சியில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நகரசெயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தால் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் சாதாரணமாக நடக்கும்.
திமுக அழிக்கப்பட வேண்டுமென்றால் இது தான் சரியான தேர்தல். இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் திமுக அழிக்கப்படுவது உறுதி.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், நீட் திட்டத்தையும் கொண்டு வந்தது திமுக தான். ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல், ஆட்சியில் இல்லாத போது மக்களுக்கான செயல் என மிகப்பெரிய நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலையாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!