உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததுள்ளன. இதனையடுத்து காலை 11 மணிவரை மட்டுமே கள்ளக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் திறக்கப்படும் என்றும், இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சாலையில் காவலர்கள் இல்லாததால் வழக்கத்தைவிட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ரீகாந்து, அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.
இதனையடுத்து நான்கு முனை சந்திப்பில் காவல் துறையினர் இல்லாததையடுத்து, அங்கு உடனடியாக காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் அரசின் நடவடிக்கையில் உங்களுக்கும் பங்கு உண்டு, எனவே வீட்டிலேயே இருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசு உத்தரவு