கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனித்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு. சமீபத்தில், தன்னைவிட மிகவும் வயது குறைந்த பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் புரிந்ததால் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டார்.
இவர்களது திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், நேற்று மாலை (நவ.9) வெளியாகின.
அதில் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: ஊராட்சி மன்றத் தலைவி தற்கொலை?