கள்ளக்குறிச்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் கரோனா தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எமன் வேடம் அணிந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கரோனா விழிப்புணர்வு குறித்த பாடல்களை பாடினர்.
தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொது மக்களை எமதர்மன் வேடமணிந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் மடக்கிப் பிடித்து கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன், காவலர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 4ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை