கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி வெண்ணிலா கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் சிறுலாப்பட்டு கிராமத்தின் பண்ருட்டி முதல் கெடிலம் சாலையில் உள்ள ஏரியின் அருகே அடையாளம் தெரியாத வகையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், திருநாவலூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு போக்சோ