தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்த குழந்தைகள், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ராக்கி கட்டி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர்.
அப்போது குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி பயிலத் தேவையான உபகரணங்களை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் காவல் துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவரும் குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தொப்பி அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு: அடையாளம் தெரியாத நபர்களுக்கு வலைவீச்சு