கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் குழந்தைகளான சமீரா(9), யோகேஷ்(7) ஆகிய இருவரும் அதே ஊரில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றும் இயலவில்லை. இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த எடைக்கல் காவல்துறையினர், உடல்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.