உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பறை இசைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வட்டாட்சியர் காதர் அலி தலைமைத் தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு தொழிலாளர் உதவி ஆய்வாளர் அரியமுத்து உளுந்தூர்பேட்டையில் உள்ள அனைத்து சிறு தொழிற்சாலை, கடைகளில் சென்று குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா என ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடை உரிமையாளரிடம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரம் கொடுத்து அறிவுரை வழங்கினார்.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மகளிர் நல அலுவலர் ரேணுகா, சமூகநலத் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார், காவல் ஆய்வாளர் எழிலரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : மாவோயிஸ்ட் ஸ்ரீமதி கோவை நீதிமன்றத்தில் முன்னிலை!